மாதாந்திர பட்ஜெட் பட்டியலில் முதலிடம் பிடிப்பது மளிகை சாமான்கள் என்றால், அதற்கு அடுத்த இடம் எப்போதுமே சிலிண்டர்களுக்கு தான். ஏனெனில், சிலிண்டர் இல்லாவிட்டால், மாதம் முழுவதும் வீட்டு சாப்பாட்டுக்கு திண்டாட்டம்தானே.
எனவே நடுத்தர குடும்பங்களைப் பொருத்தவதை, LPG சிலிண்டர் என்பது அவர்களின் அன்றாட வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்றபோதிலும், அது சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் மானியம் என்பது நுகர்வோருக்கு நிம்மதி அளிப்பதாக இல்லை. எனவே, சில டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங்கிற்கு (Gas Cylinder Booking) சலுகைகளை வழங்கி வருகின்றன.
அந்த வரிசையில், Paytm நிறுவனம் தங்கள் app மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்வோருக்கு ரூ.500 ரூபாயை Cash Back offer-ராகத் தருகிறது. இது முதன் முறையாக Paytm app மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த ரூ.500 செலவை Paytm நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.
எப்படி பெறுவது? (How to get)
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் மொபைலில், Paytm appயை Download செய்துவிட்டு அதன்மூலம் LPG சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். அதில்
பாரத், இன்டேன், ஹெச்.பி (Bharat Gas, Indane and HP Gas) சிலிண்டர்கள், அனைத்திற்கும் இந்த சலுகை பொருந்தும். அவ்வாறு முன்பதிவில் பணம் செலுத்தும்போது paytm gas booking promocodeயைக் Click செய்யவும். அப்படி Click செய்தால் மட்டுமே 500 ரூபாய் Offerயைப் பெற முடியும்.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!
Share your comments