கோவை அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 4-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கி விநியோகிக்கத் தொடங்கும் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
மாவட்டத்தில் உள்ள 10.78 லட்சம் பெறுநர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 200 பேர் என அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும். அரிசி அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் இந்த பட்டியலில் அடங்குவர்.
பொங்கல் பரிசுகளை வழங்கல் (Distribution of Pongal gifts)
விநியோக தேதி மற்றும் நேரம் டோக்கன்களில் அச்சிடப்படும். பாயின்ட் ஆப் சேல் இயந்திரம் மூலம் சீட்டுகள் விநியோகிக்கப்படும். அரசு அறிக்கையின்படி, விநியோகத்தைத் தொடர்ந்து அட்டைதாரரின் பதிவு செய்யப்பட்ட போபைல் எண்ணில் ஒரு எஸ்எம்எஸ் வரும் என்பது குறிப்பிடதக்கது.
கொடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில், கார்டுதாரர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர், கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று, தங்கள் முறைக்காகக் காத்திருக்கலாம்.
குடும்பத் தலைவருக்கு ரூ.1000 (Rs.1000 per household head)
மறுபுறம், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகையாக, ரூ.1000ம் குடும்ப தலைவருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 2022ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு முன்பாக 20 பொருட்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் அவர் பொங்கல் பரிசு ஜனவரி 3, 2022 முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மொத்தம் 2,15,48,060 வீடுகளுக்கு ரூ.1,088 கோடி செலவில் 20 பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, குறிப்பிடதக்கது.
பொதுமக்களுக்கு துணிப்பை உள்ளிட்ட 21 பரிசுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தாலுகா வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்: தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்;
கோவை வடக்கு: 94450-00247
கோவை மேற்கு: 94450-00250
கோவை தெற்கு: 94450-00247
பொள்ளாச்சி: 94450-00252
அன்னூர்: 94457-96442
ஆனைமலை : 97892-30138
பேரூர்: 94450-00249
மதுக்கரை : 94450-00248
கிணத்துக்கடவு : 94457-96443
மேட்டுப்பாளையம் : 94450-00251
சூலூர் : 94450-00406
வால்பாறை : 94450-00253
மேலும் படிக்க:
தோட்டக்கலை பயிர்கள் மூலம் இரட்டிப்பு லாபம்: வயலில் 20% இயற்கை விவசாயம்
உறைபனியில் இருந்து பயிர்களை காப்பாற்ற, இந்த பணியை செய்திடுங்கள்
Share your comments