
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது
தர்மபுரி அரூர், புதுக்கோட்டை அன்னவாசலில் தலா, 7; காரைக்காலில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், இன்று மழை பெய்யலாம்.
நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி உட்பட 13 மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.
Read more:
Share your comments