
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 14 இளநிலை பட்டப்படிப்புகள், 3 டிப்ளமா படிப்புகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் வழங்கப்படும் 3 இளநிலை பட்டப்படிப்புகள் அனைத்திற்கும் கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பாடப்பிரிவுகள்:
பி.எஸ்சி.,:
வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பட்டுவளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை
பி.டெக்.,:
வேளாண் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரி தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம்
மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்:
8,501
இளநிலை பட்டப்படிப்புகள்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 2,516 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 4,405 இடங்கள் என மொத்தம் 6,921 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவைதவிர, அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 340 இடங்களும் 2025-26ம் கல்வியாண்டில் நிரப்பப்படுகின்றன.
டிப்ளமா படிப்புகள்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 450 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 150 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 640 இடங்கள் என மொத்தம் 1,240 இடங்களும் இந்த கல்வியாண்டில் நிரப்பப்பட உள்ளன.
சிறப்பு இடஒதுக்கீடுகள்:
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 213 இடங்கள், தொழில்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு 223 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 128 இடங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 இடங்கள்.
சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு வாயிலாகவும், இதர இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில படிப்புகளில் தொழிற்பிரிவு மாணவர்கள் சேர தகுதி உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 8
விபரங்களுக்கு:
https://tnau.ucanapply.com
Share your comments