நாடு முழுவதும் இன்று 14-ஆம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஒன்றை ஏற்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
உறுதிமொழி
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும் மற்றும் மறைந்த தலைவருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் வர இருக்கும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கும் தொடக்க/நடுநிலை/மேல்நிலை என அனைத்து பள்ளி மாணவர்களும் உறுதிமொழி ஒன்றை ஏற்க வேண்டும்.
குழந்தைகள் தினம் (Children's day)
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும் இத்தினத்தில் ஓர் உறுதிமொழி ஒன்றை ஏற்கிறோம். சமுதாயத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களின் நலனுக்காக நாங்கள் எப்பொழுதும் ஆதரவாக இருப்போம் என்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்கவேண்டும்.
மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து பள்ளி மாணவர்களும் 14ஆம் தேதி (இன்று) காலை இறைவணக்கக் கூட்டத்தில் சமூக முன்னேற்ற உறுதிமொழி ஏற்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!
Share your comments