1. செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? முழு விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
In which districts will it rain? Full details inside!
Credit: India TV

வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்ளுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் 1கிலோமீட்டர் உயரத்திற்கு ம் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

01.04.21

மழைக்கு வாய்ப்பு (Chance of rain)

இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி,ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை (Dry weather)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

02.05.21

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

03.05.21

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  • கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதுல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • காற்றின் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் செய்யும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிறிய வண்ணம் கொண்ட (Light colour) கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

கடல் உயர்அலை முன்னறிவிப்பு (Ocean tide forecast)

ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 02.05.21 அன்று இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 1 முதல் 2.5 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் சற்று எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகுமா!

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை- இத்தனைக் கட்டுப்பாடுகளா?

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: In which districts will it rain? Full details inside! Published on: 01 May 2021, 02:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.