1. செய்திகள்

அகவிலைப்படியில் உயர்வு வேண்டும்: போக்குவரத்து பென்சனர்கள் போராட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pensioners strike

புதிய அகவிலைப்படி உயர்வை வழங்காத தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற நல அமைப்பினர் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து நல அமைப்பினர் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு சங்கத்தின் மண்டல தலைவர் பி.என்.பழனிவேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பென்சனர்கள் போராட்டம்

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை இதுவரை போக்குவரத்து துறை வழங்கவில்லை; இதனை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக நவம்பர் 5ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இதுவரை அலட்சியப்போக்குடன் நடக்கும் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அரசு மற்றும் போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 25ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் மண்டல செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

பென்சன் தொகை உயர்வு: யாருக்கெல்லாம் கிடைக்கும் - முழுவிவரம் இதோ!

2014 பென்சன் திட்டம் செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

English Summary: Increase in allowance: Transport pensioners strike! Published on: 08 November 2022, 06:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.