தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.09.2022) சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ, “வாழ்வாதார நம்பிக்கை” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கடும் நிதிநெருக்கடி இருந்தபோதும் மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களுக்குத் தாமதமின்றி முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 01-01-2022 முதல் 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்டது. 75ஆவது சுதந்திர தினத்தன்று, மாநில அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, 01-07-2022 முதல் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குவதற்காக மாநில அரசிற்கு இந்த நிதியாண்டு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவினம் ஏற்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதற்காக, பல வழிகளில் பழிவாங்கப்பட்டதாகவும், அந்த நடவடிக்கைகளை திமுக அரசு அமைந்ததும் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாகவும் ஸ்டாலின் பேசினார்.
திமுக அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் படிக்க
நெல் அரிசி ஏற்றுமதி: 20% வரி விதித்தது மத்திய அரசு!
ICICI வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Share your comments