1. செய்திகள்

அகவிலைப்படி உயர்வு|சிலிண்டர் மானியம் |நெல்லையில் புதுவித விழிப்புணர்வு

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

1,மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1 ஆம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,சிலிண்டர் மானியம் அதிகரிப்பு

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ.200 மானியம் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் 35 லட்சம் பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3,பான் கார்டுடன் - ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள்

இந்தியர்கள் அனைவருமே ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆகும். ஒருவேளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயலிழக்கும் பட்சத்தில் வங்கி சேவைகளையோ, பண முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தணைகளையோ மேற்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

4,ஒரு பிளாஸ்டிக் பாட்டீலுக்கு ஒரு ருபாய் நெல்லையில் புதுவித விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பாட்டில்களால் உண்டாகும் சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் நோக்கில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்குப் பின் அலட்சியமாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துவதுடன், மண்ணில் புதையும் பட்சத்தில் பல்வேறு சூழலியல் கேடுகளையும் ஏற்படுத்தும்.

அதனைத் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

5,க்ரிஷி ஜாக்ரானின் ”உழவர் பத்திரிக்கையாளர்” திட்டத்தை பாராட்டிய ஒன்றிய அமைச்சர்கள்

ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் க்ரிஷி சன்யந்தரா மேளா-2023 இன்று தொடங்கியது. இந்த மேளா மூன்று நாள் நிகழ்வாக வருகிற முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்வை ஏற்பாடு கிரிஷி ஜாக்ரானை ஒன்றிய அமைச்சர்கள் வெகுவாக பாராட்டினார்.

ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் இன்று நடைப்பெற்ற க்ரிஷி சன்யந்த்ரா மேளா 2023-வில் ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, பாலாசோர் எம்பி, பிரதாப் சந்திர சாரங்கி, எஸ்பிஐ மேலாளர் (LHO), துருவா சரண் பாலா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும் படிக்க

36 செயற்கைக் கோள்களுடன் LVM-III ராக்கெட் - இஸ்ரோ நிகழ்த்திய மற்றொரு சாதனை!

Tally ERP-9 குறித்து 5 நாட்கள் இணைய வழி பயிற்சி- பங்கேற்பதால் இவ்வளவு நன்மையா?

 

English Summary: Increase in subsidized price|Cylinder subsidy|Innovative awareness in paddy Published on: 26 March 2023, 06:12 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.