காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சலால், 2வது நாளாக ஏராளமானோர் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது H1N1 இன்புளுயன்சா காயச்சல் வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக இந்த வகை வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலும் பரவி வருகின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையிலுள்ள காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் ஏராளமான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பரபரப்பான நிலையிலேயே காணப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள், பெரியவர்கள் என 150 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய காட்டிலும் இன்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாமனது நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மருத்துவமனை வளாகமே நோயாளிகள் நிரம்பியும் இரண்டாவது நாளாக பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் படிக்க:
பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?
விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?
Share your comments