1. செய்திகள்

வேகமெடுக்கும் ஒமிக்ரான் - அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Increasing Omigron Spread- Night Curfew Effects!
Credit : Reuters

ஒமிக்ரான் வேகம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த ஏதுவாக,  இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

6½ லட்சம்  பேர் (6½ Lakh People)

சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமிக்ரானும் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கிவிட்டது.

ஒரே வாரத்தில் அமெரிக்காவில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் ஒமிக்ரானுக்கு பலியாகியுள்ளார்.

முதல் பலி (First Dead)

அங்கு டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 50 வயது கடந்த ஒருவர் இந்த தொற்றால் இறந்துள்ளார். இவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்திலும் பலி

அதேவேளையில், ஒமிக்ரான் தொற்றுக்கு உலக அளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரே வாரத்தில் உலக நிலவரம் இப்படியிருக்க, இந்தியாவில் மொத்தம் 213 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

  • கொரோனாத் தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

  • டெல்டாவை விட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.

இரட்டிப்பு பாதிப்பு (Double impact)

நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் அனைத்து மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

WHO எச்சரிக்கை: தடுப்பூசி போட்டாலும் கவனம் தேவை!

English Summary: Increasing Omigron Spread- Night Curfew Effects! Published on: 22 December 2021, 10:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.