விளைபொருளை விளைவித்துத் தரும் மண்ணின் மீது, உங்கள் வாடிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட விவசாயியா நீங்கள்?
உயிரூட்டும் விவசாயிகள் (Livelihood farmers)
பயிரின் வளர்ச்சிக்காகப் உழைக்கும்போது, பலவிதக் கஷ்டங்கள் வந்தாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கிப் பாடுபடுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
ஆன்லைனில் (Online)
விவசாயிகளுக்கான 'வேளாண் செம்மல் விருது 2021 உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்களைப் பற்றியத் தகவல்களுடன் இந்த விருக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.
நாடித்துடிப்பு (Pulse)
விவசாயம்தான் நம் நாட்டின் முழுகெலும்பு என்பார்கள். ஆனால் அந்த விவசாயத்தின் நாடித்துடிப்பு எது தெரியுமா? பகல், மாலைவேளை, இரவு என நேரம் பார்க்காமல், தன் குழந்தை போல வளர்க்கும் பயிரின் மேன்மைக்காக 24 மணிநேரமும் அயராது உழைக்கும் விவசாயிதான் வேளாண்மையின் நாடித்துடிப்பு ஆகும்.
சிறந்த விவசாயி (The best farmer)
எனவே அர்ப்பணிப்போடு பணியாற்றும் பூவுலக பிரம்மாக்களான விவசாயிகளைக் கவுரவிக்கும் விதமாக சிறந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பங்கு பெற்று சிறந்த அங்கீகாரத்தை பெற்று கொள்ள இது வாய்ப்பாக அமையும்.
தலைப்புகள்
விருதுக்கான தலைப்புகள் பின்வருமாறு
-
வேளாண் விதை உற்பத்தியாளர்
-
அங்கக வேளாண்மை.
-
வறண்ட நிலங்களுக்கான பழப் பயிர் சாகுபடி,
-
இயற்கை உரம் தயாரிப்பு (மண்புழு உரம், பஞ்சகாவ்யா போன்றவை).
-
சிறுதானிய சாகுபடி,
-
கால்நடை வளர்ப்பு,
-
மதிப்புக்கூட்டிய உணவுப் பொருள்கள்,
-
காளான் வளர்ப்பு,
-
தேனீ வளர்ப்பு,
-
முன்னோடி விவசாயி,
-
மரம் வளர்ப்பு.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)
மேற்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிறப்பு பெற்றிருந்தால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் புகைப்படத்தை ஒட்டி உங்களைப் பற்றி ஒரு பக்க கட்டுரை எழுத வேண்டும்.
தபாலில் விண்ணப்பிக்கலாம் (You can apply by post)
இதனைத் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் கோவிலாங்குளம், அருப்புக் கோட்டை 626107 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கலாம்.
அல்லது tnaukvkvnraward2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக உங்கள் விண்ணப்பங்களைத் தகுந்த ஆதாரங் களுடன் அனுப்பும்படி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலக்கெடு (Deadline)
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.08.2021 புதன்கிழமை.
இது அனைவருக்கும் உணவளிக்கும் ஒரு சிறந்த தொழிலைச் செய்துவருகிறீர்கள் என்பதற்கான அங்கீகாரம்.
அனைவரும் இணையுங்கள். உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்புக்கு (Contact)
கூடுதல் விவரங்களுக்கு முனைவர் சி.ராஜா பாபு. தொடர்பு எண் 91717 17832.
மேற்கண்டத் தகவல்களை அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
விரைவில் கிடைக்கப் போகிறது பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் தவணை!
Share your comments