நாட்டு மக்களுக்கு, 100 கோடி கோவிட் தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்தி, இந்தியா இன்று (அக்டாபர் 21) சாதனை படைத்துள்ளது. இதற்கு பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 130 கோடி பேர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றியை உணர்கிறோம். இது பெரும் வரலாற்று சாதனை என்றும் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி
நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை (Corona Vaccine) மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்றதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று, மக்களுக்கு ஒரே நாளில் 2.5 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 21) காலை 8 மணி நிலவரப்படி, 99.85 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தன.
தடுப்பூசி முகாம்
தொடர்ந்து நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பலனாக 100 கோடி டோஸ்கள் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
பாராட்டு
இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,78,831 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 98.15 ஆக உள்ளது. இந்த சாதனைக்கு பிரதமர் மோடி (PM Modi) பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10-இல் நடைபெறவிருக்கிறது
Share your comments