கிசான் கிரடிட் கார்டு மூலம் மீனவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தினை இந்தியன் வங்கி துவங்கியுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கும் 7% வட்டியில் ரூபாய் 2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
விவசாயிகள், கால்நடை வளர்போர் மற்றும் மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நோக்கில் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது பின், கால்நடை வளர்ப்போருக்கும், மற்றும் மீனவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கிசான் கிரடிட் கார்டு மூலம் மீனவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தினை இந்தியன் வங்கி துவங்கியுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு 7% வட்டியில் ரூபாய் 2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
மீன்வளத்துறையில் ஒப்புதல் அவசியம்
விசைப்படகு வைத்துள்ள மீனவர்களுக்கு இந்த கடனானது வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற தமிழ் நாடு மீன்வளத்துறையில் ஒப்புதல் கடிதம் மற்றும் விசைப்படகின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் மூலம் பெறப்படும் கடன் தொகையினை முறையாக செலுத்தும் மீனவர்களுக்கு வட்டி மானியமும் 3% வழங்கப்படும். இதன் மூலம் மீனவர்கள் தங்களின் கடன் தொகைக்கு 4% என்ற குறைந்த வட்டி மட்டுமே செலுத்தலாம். வருடம் ஒருமுறை கடனை சரியான முறையில் வரவு செலவு செய்து புதுப்பித்து கொள்ளலாம். இந்த கடனானது முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
கடன் பெறுபவர்களுக்கு ரூபே (Rupay)டெபிட் கடன் அட்டை (Debit card)அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் பணம் எடுத்து கொள்ளலாம்.
மேலும், அனைத்து கடைகளிலும் கடன் அட்டை மூலம் மின்னணு பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மீனவர்கள் தங்களின் தேவைக்கு அருகில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை அல்லது தமிழக மீன்வளத்துறையை அணுகலாம் என்றும் பத்மஜா சந்துரு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 9ம் தேதி உருவாக வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்!
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
Share your comments