மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகன விதிமுறைகளை கடுமையாக்குவதன் மூலம், விபத்துகளை கணிசமாக குறைகலாம்.
தற்போது அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுக படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதற்கான மசோதா கொண்டு வர பட்டு விவாதிக்க பட்டது. மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா காலாவதியாகி விட்டது.
புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்க பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்க பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது
புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிக படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின் வருமாறு
- சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு ரூ 25,000 அபராதம், மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
- தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 100 முதல் ரூ 1000 வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து.
- சீட் பெல்ட் போடாமல் செல்பவர்களுக்கு ரூ 100 முதல் ரூ 1000 வரை அபராதம் வசூலிக்க படும்
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 5000 வரை அபராதம். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள், அதை மீறி வாகனம் ஓட்டினால் ரூ 500 இல் இருந்து ரூ 10000 வரை வசூலிக்க படும்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 வரை அபராதம்.
- வாகன பந்தயதில் ஈடுபடுவோருக்கு ரூ 5000 வரை அபராதம்.
- குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பளு ஏற்றி சென்றால் டன்னுக்கு தலா ரூ 2000 வரை வசூலிக்க படும்.
விரைவில் இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments