வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அப்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் (Driving licence)
திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5
சதவீத வட்டியுடன் அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இன்சூரன்ஸ் (Insurance)
இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க
EPFO வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மன அழுத்தத்தில் இந்தியப் பணியாளர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Share your comments