1. செய்திகள்

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

Deiva Bindhiya
Deiva Bindhiya

Insurance up to Rs 50 lakh for cylinder holders

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் நிறைய சலுகைகள் வழங்கப்படுக்கிறது. அரசு திட்டங்களில், இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் இடம் பெறுகின்றன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெங்கும் பரவி வருவதைக் காணலாம்.

சமையல் சிலிண்டருக்கு காப்பீடு வசதியும் உள்ளது. அது நிறைய மக்களுக்கு தெரியவில்லை. ஏனெனில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயமும், நம்மிடையே இருந்து வரும் ஒரு பிரச்சனை தான்.

அவை இயல்பாகவே பாதுகாப்பானவை என்றாலும், வாடிக்கையாளர்களின் கவனக் குறைவால் ஏதேனும் அசம்பாதிவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இதற்கேன காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பை வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து, அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியை வழங்குவதற்காக முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன, என்பது குறிப்பிடதக்கது. வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கப்படும்போதே அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்யப்படும், அதன் பின்னரே வழங்கப்படும். அதன் பின்னர், ஏதேனும் விபத்து அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. பொருட்சேத்திற்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால், முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை சமர்பிக்க வேண்டியது அவசியம்.

விபத்துகள் பல நடந்து வரும் நிலையில், இவ்வாறான காப்பீடு நமக்கு தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

Flipkart Sale: அட்டகாசமான ஆஃபரில் ஸ்மார்ட்வாட்ச் - 60% வரை தள்ளுபடி

ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!

English Summary: Insurance up to Rs 50 lakh for cylinder holders

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.