1. செய்திகள்

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Eco friendly coir Craft

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் ஜனவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சாவூர் உள்ள பிள்ளையார்பட்டி என்ற  இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கயிறு தொழில்நுட்பத்தில் பட்டயப் பயிற்சி அளிக்கப் பட உள்ளது.

பயிற்சி விவரங்கள்

தகுதி : மேல்நிலைத் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம் :15 மாதங்கள்

உதவித்தொகை : ரூ.3,000

வகுப்பு தொடங்கும் நாள் : பிப்ரவரி 3ம் தேதி

இப்பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது தபால்  மூலமோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வரும் 17ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் முகவரிக்கு, தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

அலுவலகப் பொறுப்பாளர்,

மண்டல விரிவாக்க மையம்,

பிள்ளையார்பட்டி, வல்லம் வழி,

தஞ்சாவூர் – 613403

04362 – 264655

English Summary: Intensive Training Courses for Coir and Coir products at Tanjore Published on: 06 January 2020, 11:49 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.