பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள, பதிவு பெற்ற டாக்டர்களை கண்டறியும் வகையில், தமிழக மருத்துவ கவுன்சில் சார்பில் வடிவமைக்கப்பட்டு உள்ள, 'சர்ச் பார் டாக்டர் ஆப்' என்ற, மொபைல் போன் செயலியை, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் அறிமுகம் செய்தார். அத்துடன், டாக்டர்கள், 'டெலி மெடிசின்' முறையில் நோயாளிகளுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை கூறவும், மருந்துகளை பரிந்துரைக்கவும் வடிவமைக்கப்பட்ட செயலியை, எம்.பி., கலாநிதி வீராசாமி; மருத்துவ சான்றிதழ் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயலியை எம்.பி., கனிமொழி சோமுவும் அறிமுகம் செய்தனர்.
மருத்துவ செயலி (Medical App)
மருத்துவ செயலிகள் குறித்து, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: தமிழக மருத்துவ கவுன்சில், 'சர்ச் பார் டாக்டர்' என்ற மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில், நோயின் போது இநத செயலியின் வாயிலாக, அவசர காலங்களில், எளிமையாக மருத்துவர்களை கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். நாட்டிலேயே முதன்முதலாக, தமிழகத்தில் தான் டாக்டர்களை அறியும் செயலி அறிமுகமாகி உள்ளது.
தமிழக மருத்து கவுன்சிலில், 1.60 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த செயலியில், 80 ஆயிரம் டாக்டர்களின் விபரங்கள் உள்ளன. மேலும், பல டாக்டர்களின் விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும். இதன் வாயிலாக, போலி மருத்துவர்களை தவிர்த்து, பதிவு பெற்ற டாக்டர்களிடம் பாதுகாப்பான சிகிச்சை பெற முடியும்.
டாக்டர்களின் சான்றிதழ் பெற, மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பெறவும், ஆலோசனை மற்றும் மருந்துகள் பெறவும் செயலிகள் உருவாக்கப் பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க
200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!
உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Share your comments