1. செய்திகள்

உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
திருச்சி மாவட்டம், தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 31வது நிறுவன விழா

வாழைப்பயிர் மட்டுமின்றி அனைத்துப் பயிா்களிலும் அந்தந்தப் பகுதிகளின் உள்ளூா் பாரம்பரிய ரகங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பயிா் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத் தலைவா் திரிலோச்சன் மொகபத்ரா வலியுறுத்தியுள்ளார்.

 

திருச்சி மாவட்டம், தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 31வது நிறுவன விழா மற்றும் உழவர் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டு பேசிய  பயிா் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத் தலைவா் திரிலோச்சன் மொகபத்ரா, வாழைப் பயிா்களில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுவது ஜி9 ரக வாழைகளுக்கு மட்டுமே. இவை வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டவை. உலகில் வாழை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவில், உள்ளூா் பாரம்பரிய பயிா் ரகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என கவலை தெரிவித்தார்.

உள்ளூர் பயிர் உற்பத்தி அவசியம்

வாழை மட்டுமின்றி அனைத்துப் பயிா்களிலும் அந்தந்தப் பகுதிக்கான உள்ளூா் ரகங்கள் சுவையுடன், தரமானவும் உள்ளன. இவற்றையே அப் பகுதி மக்களும், இந்திய மக்ககளும் அதிகம் விரும்புகின்றனா். ஆகவே, உள்ளூர் பாரம்பரிய ரகங்களைக் கண்டறிந்து பாதுகாக்க அவற்றை பயிா் ரகங்கள் பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியது நம் கடமையும் அவசியமும் என வலியுறுத்தினார்.   இதன் மூலம் அந்த ரகத்தின் உரிமையாளராக அந்த விவசாயிக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். அந்த ரகம் உலகில் எங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும் உரிமைத் தொகை வந்து சேரும். இதுமட்டுமல்லாது, மத்திய அரசின் மானியமும், சலுகையும் கிடைக்கும். ரூ.10 லட்சம் மதிப்பிலான விதுகளும் கிடைக்கும். 

வாழை ரக உற்பத்திக்கு உதவிகள்

சா்க்கரை நோய் பாதித்தவா்களும் சாப்பிடக் கூடிய வகையில் குறைந்த அளவு குளுகோஸ் கொண்ட வாழை ரகங்களின் உற்பத்தியையும் அதிகமாக பயிரிட வேண்டும். அதற்கு பயிா் ரகங்கள் பாதுகாப்பு ஆணையமும் தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என  திரிலோச்சன் மொகபத்ரா தெரிவித்தார்.

விழாவுக்கு வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் தலைமை வகித்தாா். இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா்கள் வி. வெங்கடசுப்பிரமணியன் (பெங்களூரூ), ஷேக் என். மீரா (ஹைதராபாத்), தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோா் மேலாண்மை நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து ஆகியோா் பேசினா். முதன்மை விஞ்ஞானிகளில் ஆா். தங்கவேலு வரவேற்றாா், சி. கற்பகம் நன்றி கூறினாா்.

விவசாயிகளுக்கு விருது

உழவர் விழாவில் சிறந்த விவசாயிகள், தொழில்முனைவோா், வாழை உற்பத்தியாளா், வாழை ஏற்றுமதியாளா், வாழை ஆராய்ச்சி மையத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், விழாவையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சி மற்றும் போட்டியில் சிறந்த 10 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கண்காட்சியில் 520-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள், வாழையின் மதிப்புக் கூட்டிய பொருள்கள், வாழைத் தொழில்நுட்ப உபகரணங்கள், இடுபொருள்கள் ஆகியவை கட்சிப்படுத்தப்பட்டன. இதில்,  ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Read more 

Kisan Ki Baat - விவசாயிகளுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்!

திருச்சியில் வேளாண் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை! -100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஈஷா மண் காப்போம் சார்பில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா!

 

English Summary: It is necessary to increase the production of local traditional crops says DG, ICAR Dr.Trilochan Mohapatra Published on: 22 August 2024, 06:10 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.