1. செய்திகள்

பண்டிகைகளை முன்னிட்டு தங்கத்துடன் போட்டியிடும் மல்லிகைப்பூ!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Jasmine competing with gold, ahead of the festivals!

தைமாதத்தின் முதல்நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து இயற்கைக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக, இந்த நாள், பொங்கல் திருநாளாக தமிழர்களால் கொண்டாப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஒரு பழமொழியும் உண்டு. தமிழர்களின் வாழ்வியலில் தைப்பொங்கல் முக்கியமான திருவிழாவாக சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

மதுரை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது மீனாட்சி அம்மன் கோவில் மற்றொன்று மல்லி பூ, அதுவும் குண்டு மல்லிக்கென தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், தைமாதம் முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் புதுபானை, கரும்பு, பூஜை பொருடகள் என, வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கொரோனா காலகட்டத்திலும் அலைமோதுவதைப் பார்க்க முடிகிறது. தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்குகிறது, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை. இங்கு பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் சரமாறியாக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கிலோ 2000 முதல் 2500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ விலை இன்று ஓரே நாளில் 1000 ரூபாய் விலை உயர்ந்து 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இம்முறை, எதிர்பார பருவ மழையால், மல்லிகை வரத்து குறைந்துள்ளது. மேலும், பண்டிகை காலம் என்பதாலும் விலை அதிகரித்திருக்கிறது. அதேபோல் கனகாம்பரம் ரூ. 1300ம், பிச்சிப் பூ ரூ. 2000ம், முல்லைப்பூ ரூ. 2000த்திறகும், மெட்ராஸ் மல்லி 2000 ரூபாயாகவும், அரளி கிலோ 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களும் பண்டிகை என்பது, நாம் அனைவரும் அறிந்ததே, எனவே பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க:

2022: பொங்கல் பண்டிகை பற்றிய குட்டி ஸ்டோரி!

தேசிய இளைஞர் தினம்: 'அக்ரிடெக்-இல் இளைஞர்களின் தாக்கம்', பல கருத்துக்கள்

English Summary: Jasmine competing with gold, ahead of the festivals! Published on: 13 January 2022, 03:51 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.