நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தர்மகிரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ரீனா (50), பெண் விவசாயி. கணவரை இழந்த இவர் வங்கியில் ரூ.50 ஆயிரம் விவசாய கடன் வாங்கினார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுமா (50) என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார்.
சில தவணை செலுத்திய பின்னர் ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் வேலைக்கு செல்லமுடியவில்லை. கடன் தவணையை தொடர்ந்து செலுத்த முடியவில்லை.
கடனை அடைத்த நீதிபதி
இந்நிலையில் நேற்று கூடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வங்கி அதிகாரி ஒரே தவணையாக ரூ.20 ஆயிரம் செலுத்தினால் கடனில் இருந்து விடுவிப்பதாக கூறினார். ஜாமீன் அளித்த சுமாவும் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறினார். அவர்களின் நிலைமையை விசாரித்து உண்மை தான் என்பதை நீதிபதி வெங்கட சுப்பிரமணி தெரிந்து கொண்டார். பின்னர் நீதிபதி, வக்கீல்கள் ஆப்சல்ஜா, பிலிப்போஸ் மற்றும் வங்கி மானேஜரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Also Read | நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்க கோரிக்கை!
இறுதியாக ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்யப்பட்டது. கடன் தொகையை நீதிபதி, வக்கீல்கள் சேர்ந்து செலுத்தி ரீனா மற்றும் சுமாவை விடுவித்தனர்.
மேலும் படிக்க
கோ - வின் இணையதளத்தில் அறிமுகமானது புதிய வசதி
போலீசாருக்கு 8 மணி நேர வேலை: ஐகோர்ட் உத்தரவு!
Share your comments