முதலீடு செய்யச் சிறந்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதிலும் வெறும் 1000 ரூபாய் போதும். இந்த சேமிப்பு குறித்த முழு விவரத்தினை இப்பதிவில் பார்க்கலாம்.
மிட்கேப் ஃபண்டுகள் என்பன நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளைக் குறிக்கும். செபி விதிமுறைகளின்படி, சந்தை மூலதனத்தில் 101 முதல் 250 வரை உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய மிட் கேப் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் முதலீட்டாளர்களுக்குச் சந்தையில் பெரிய லாபம் ஈட்ட வழிவகுக்கின்றது. இந்த நிறுவனங்கள் வாக்குறுதியை நிறைவேற்றினால், சந்தை முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிட்ட லாபத்தினை அளிக்கும்.
சில சமயங்களில் முதலீடு செய்துள்ள நடுத்தர நிறுவனங்கள் சரிவரச் செயல்படாமல் இருந்தால் மிட்கேப் ஃபண்டுகள் அதிகப்படியான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மிட்கேப் ஃபண்டுகள் யாருக்கெல்லாம் ஏற்றது என்று பார்த்தால் அதிக மாற்று நிலைகளை ஏற்று, அதிக சகிப்புத் தன்மை கொண்ட முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது ஏற்றதாக அமையும் எனக் கூறப்படுகிறது. அதோடு, 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு எல்லையையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முதலீட்டு திட்டங்கள் வருமாறு:
ஆக்சிஸ் மிட்கேப் திட்டம்
பிஜிஐஎம் இந்தியா மிட்கேப் ஆப்பர்ச்சுனிட்டி திட்டம்
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் திட்டம்
கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி திட்டம்
டாட்டா மிட்கேப் குரோத் திட்டம்
மேலே குறிப்பிட்டதுபோல் இந்த மிட்கேப் ஃபண்டுகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். குறுகிய காலத்தில் முதலீடு செய்தால் சந்தை அபாயங்களுக்கிடையே அதிகப்படியான இழப்பை சந்திக்க இயலாமல் அதிக லாபத்தினைப் பெற்றுப் பயனடையலாம்.
மேலும் படிக்க
ஆடு வளர்த்தால் அம்பானி ஆகலாம்! இன்றே தொடங்குங்க!!
Mutton Biryani: சுடச்சுட சுவையான மட்டன் கோலி பிரியாணி செய்முறை!
Share your comments