Kasi Tamil Sangam
வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களைப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்ககமும் நடத்தப்படுகிறது. கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும், முறைப்படி 19ம்தேதி(இன்று) பிரதமர் மோடி தொடங்கி வைத்தி நடத்தினார். இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17ம் தேதிவரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணரும் வகையில் அறிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க இருக்கின்றனர்.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி முறைப்படி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, ஆளுநர் ஆனந்திபென், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காசி தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி எண்ணம் வந்தது என வியக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா தொடக்க உரையில் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வரவேற்புரையாற்றினர். இளையராஜாவின் இசைக் கச்சேரியும், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களை வெளியிட்டார். மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை மேடையில் இருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுக்கொண்டார் எனப்து குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments