காட்பாடி ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற வசதிகளை பெற வேண்டும் எனும் நோக்கிலும் பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற வசதிகள் மற்றும் எதிர்கால உள்கட்டமைப்புகளை வழங்கும் நோக்கத்துடனும், தெற்கு ரயில்வே காட்பாடி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற வசதிகள் மற்றும் எதிர்கால உள்கட்டமைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், தெற்கு ரயில்வேயானது காட்பாடி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கி இருக்கிறது. மறுசீரமைப்பு பணிக்கான டெண்டர் செப்டம்பர் 2022 இல் வழங்கப்பட்டுத் தற்பொழுது சீராக நடைபெற்று வருகிறது.
இந்த சீரமைப்புப் பணியானது M/s இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 329.32 கோடிக்கு வழங்கப்பட்ட இந்த திட்டத்தில், இரண்டு டெர்மினல்கள், வருகை மற்றும் புறப்பாடு லாபி மற்றும் பார்சல் கையாளுவதற்கான பிரத்யேக இடம் ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
M/s வோயன்ட்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.7.89 கோடி செலவில் திட்ட மேலாண்மை சேவைகளை வழங்கும் பணியை வழங்குகிறது. டெர்மினல்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. உயரமான ஸ்கைவாக்குகள் மற்றும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் கொண்ட சுரங்கப்பாதைகள் இடையூறு இல்லாத இன்டர்-மாடல் இணைப்பை வழங்கும் என்று அறிக்கை வெளியீடு கூறுகிறது.
இடம் சரிபார்ப்பு, மண் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டு ஸ்கேனிங் ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வுகள் முடிந்துள்ளன. தள அலுவலகம், ஆய்வகம், மெஸ் கட்டுதல் மற்றும் பேட்சிங் ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்டேஷன் கட்டிடங்களின் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு, பல நிலை இரு/நான்கு சக்கர வாகன நிறுத்தம், கால் மேம்பாலம் மற்றும் ஏர்-கான்கோர்ஸ் ஆகியவையும் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது, திட்ட மேலாண்மை சேவைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் பணியாளர் குடியிருப்புகள், முகாம்கள் மற்றும் பிற வசதிகளைக் கட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது விரைவில் கட்டுமானம் நடந்து முடிந்து நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000! தமிழக முதல்வர் உத்தரவு!!
ஒரு நாளைக்கு 2000 கஸ்டமர்கள்! கலக்கும் தமிழ்நாடு '90ஸ் கிட்ஸ் ஷாப்'!
Share your comments