மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 58வது மலர் கண்காட்சி மற்றும் கோடை திருவிழா நேற்று நடை பெற்றது. 10 நாட்கள் நடை பெரும் கோடை திருவிழாவின் தொடக்கமாக நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது, இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மயில், குதிரை, நந்தி, கிளி, ஒட்டகச்சிவிங்கி, உடல் கொண்ட நார்னியா மனிதன், ஆகிய உருவங்களை 20 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.
காய்கறிகளை கொண்டு ரங்கநாதர் படுத்திருக்கும் வடிவம், மசூதி, தேவாலயம் ஆகியவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆஸ்டோ ரியா, கிங் ஆஸ்டர் உட்பட்ட பல்வேறு மலர் வகை ரோஜாக்கள் மற்றும் பல்வேறு மலர் வகைகள் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் காய்கறிகளை கொண்டு செய்யப்பட்டிருந்தது கார்ட்டூன் உருவங்களை சிறுவர்கள் பெரும் ஆர்வத்துடன் அருகில் நின்று புகை படங்கள் எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாநில தோட்டக்கலை துறை என்.சுப்பையா முன்னிலை வகித்தார். சுற்றுலா அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் , வேளாண் அமைச்சர் ரா.துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கண்காட்சியை துவங்கி வைத்தார்.
ஏற்காடு கோடை திருவிழா
சேலத்தை அடுத்துள்ள ஏற்காட்டில் 44வது கோடை திருவிழா துவங்கியதை முன்னிட்டு, 1 லட்சத்துக்கும் அதிகமான மலர்களை கொண்டு மலர்க்காட்சியும், பல்வேறு மலர்களை கொண்டு 10,000 ஆயிரம் மலர் தொட்டிகள் தோட்டக்கலை துறை மூலம் வைக்கப்பட்டிருந்தன .
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments