நாட்டிலுள்ள விவசாயிகளின் இல்லமாக இருக்கும் கிரிஷி ஜாக்ரன் ஊடக நிறுவனமான 25 வடங்களை வெற்றிகரமாகக் கடந்து இன்றைக்கு 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 26-ஆம் ஆண்டு கொண்டாட்டம் கிரிஷி ஜாக்ரனின் டெல்லி மத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தின் இயக்குனர் ஷைனி டொமெனிக், நிறுவனத்தின் சிஓஓ பி.கே.பந்த், கார்போரேட், கான்டெட் பிரிவு தலைவர் சஞ்சய் குமார் முதலானோர் கலந்துகொண்ட இந்த கொண்டாட்டமானது, கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டொமினிக் அவர்களின் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவன ஆசிரியர் எம்.சி.டொமினிக் விவசாயிகளுடன் எங்கள் பயணத்திற்கு 26 பொற்கால ஆண்டுகள் நிறைந்துள்ளன. இலக்கை அடைய அனைவரும் இணைந்து செயல்படுவோம். அதன் மூலம் எங்கள் விவசாயம் செழிக்க உன்றுகோலாய் நிற்க வேண்டும் என்ற ஆசையை முழுமை செய்ய வேண்டும் என்றார். அதோடு மட்டுமல்லாமல் போதுமான சவால்களுடன் இணைந்து நிறுவனம் இன்றைக்கு செம்மையாக வளர்ந்து நின்றிருக்கிறது. இந்த நீண்ட பயணத்தில் கூடவே இருந்த அனைவருக்கும் நன்றியினை சமர்பிக்கிறோம், என்றார்.
இந்த கொண்டாட்டத்தில் கான்டெண்ட் மேனேஜர் பங்கஜ் கன்னா, சோஷியல் மீடியா பிரிவு ஜிஎம் நிஷாந்த் தாக் உட்பட விவசாயம் சார்ந்த அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share your comments