
கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியரும், நிறுவனருமான எம்.சி. டாம்னிக் இன்று தனது கிரிஷி ஜாக்ரன் குழுவினருடன் ICAR என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் Director General திரு. ஹிமான்ஷூ பதக்-ஐ மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இது குறித்த தகவலை இப்பதிவு வழங்குகிறது.
புதுதில்லியைத் தலைமை இடமாகக் கொண்ட விவசாய பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியரும், நிறுவனருமான திரு எம்.சி. டாம்னிக் இன்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் Director General திரு. ஹிமான்ஷூ பதக்-ஐ சந்தித்தார்.

இந்த சந்திப்பானது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக திரு ஹிமான்ஷூ பதக்-ஐ வாழ்த்துவதாக அமைந்தது.
இந்த சந்திப்பில் கிரிஷி ஜாக்ரனுடன் இணைந்து 730 கிருஷி விக்யான் கேந்திரங்களின் செயல்பாடுகள் விரிவுப்படுத்தப்படும் என ஹிமான்ஷூ பதக் தெரிவித்தார்.

கிரிஷி ஜாக்ரனின் நடவடிக்கைகளைக் குறித்து பேசிய அவர் விவசாயத் துறையில் புதிய திட்டங்களை வகுப்பதில் கிரிஷி ஜாக்ரனின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், விவசாயிகளுக்கு ஆதாரவாக நிற்பதாகக் கிரிஷி ஜாக்ரனுக்குத் தனது பராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க
Share your comments