கிரிஷி ஜாக்ரன் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்த ஆளுமைகளை அழைத்து பல்வேறு கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று (10.06.2022) டெஃப்லா எண்டர்டைன்மெண்ட்-இன் நிறுவனரை அழைத்துச் சிறப்பானதொரு கூட்டத்தை நடத்தியது.
கிரிஷி ஜாக்ரன் என்பது விவசாயத் துறையை ஆதரிக்கும் நோக்கில் செயல்படும் சேனலாகும். விவசாயம், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, கால்நடைகள், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் பயிர் ஆலோசனை போன்றவற்றின் விரிவான தகவல்களை ஆன்லைனில் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பக்கம் ஆகும்.
இது தவிர விவசாயத் துறை, நிகழ்வுகள் மற்றும் சந்தை விலைகள் பற்றிய அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் கிரிஷி ஜாக்ரன் வழங்குகிறது. அதன் தொடர்ச்சியாக, டெஃப்லா எண்டர்டைன்மெண்ட்-இன் நிறுவனரை அழைத்துச் சிறப்பானதொரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினரான கைலாஷ் சிங் கிரிஷி ஜாக்ரன் ஊழியர்களுடன் சுவாரசியமாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் தனது உரையை நிகழ்த்தினார்.
டெஃப்லா என்பது மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் உலகளாவிய வணிக தளங்களை உருவாக்குகிறது. டெஃப்லா என்பது நிகழ்வுகளின் திட்டமிடல் தீவிர ஆராய்ச்சி மற்றும் பல்வேறு தொழில்கள் தொடர்பான சிக்கல்கள் பற்றிய ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்டது. பரந்த மற்றும் விரிவான பங்கேற்பை ஈர்க்கும் குறிப்பிட்ட தொழில்துறைப் பிரிவின் வருடாந்திர நிகழ்வுகளான தொழில் துறைகளில் தொடர்ச்சியான நிகழ்வுகளை Tefla பெற்றுள்ளது.
குளோபாய்ல் இந்தியா, குளோபாய்ல் டெல்லி, குளோபாய்ல் இன்டர்நேஷனல், CEO வீக்கெண்ட், சர்க்கரை உச்சி மாநாடு, குளோபல் ஸ்பைசஸ் போன்றவை இவற்றில் சில. Think CSR, Think Literature, CODEC Asia, Fortune Asia, COBRA, Global Cotton Conclave, IMMAGE ஆகியவையும் இதனுள் அடங்கும். கோல்ட் & ஜூவல்லரி இந்தியா & இந்தியா SME கான்க்ளேவ், குளோபல் அக்ரி போன்றவையும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து வகையான மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளை Tefla பெற்றுள்ளது. Tefla's-இன் நிர்வாக இயக்குனரான திரு கைலாஷ் சிங், தொழில்துறை சமூகத்தைப் பொதுவான நிகழ்வுகளின் கீழ் கொண்டு வருவதற்கு பெரும் பங்க்கைச் செய்துள்ளார். அவரால் திட்டமிடப்பட்ட செயல் என்பது தொடர்பு மற்றும் கொண்டாட்டங்களின் தனித்துவமான கலவையாக அறியப்படுகிறது.
திரு. கைலாஷ் சிங், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் படிப்பில் முதுகலைப் பட்டதாரி ஆவார். அவருடைய ஆராய்ச்சிப் பின்னணி அவருக்குக் கருத்துருவாக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமை வாய்ந்த சிறப்பு ஆளுமையாகத் திகழும் திரு. கைலாஷ் சிங் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்து சிறப்பு உரை ஒன்றை வழங்கினார். அவரது உரையில் கிரிஷி ஜாக்ரனைக் குடும்பம் என்று கூறி, தனது வெற்றி பயணத்தையும் எடுத்துரைத்தார் என்பது சிறப்புக்கு உரியது. பல்வேறு ஆளுமைகளை அழைத்து உரை நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்த்தினாலும், அனைத்து நிகழ்வுகளிலும் இது மிகுந்த குறிப்பிடத்தக்க நிகழவாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க
iPhone 13 Pro Max: ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வா? கட்டணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!
Share your comments