கடைசி தேதிக்குள் KYC முடிக்காவிட்டால் வங்கி கணக்கிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் அவர்களது வங்கிக் கணக்கில் கேஒய்சி (KYC) கட்டாயமாக முடிக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை வழங்கியுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவரும் KYCயை கட்டாயமாக முடிக்க வேண்டும் என இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) தெரிவித்துள்ளது.
பிஎன்பி வங்கியின் வாடிக்கையாளர்கள் KYC முடிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 12 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குள் KYC முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் எனவும், வங்கி கணக்குக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎன்பி வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி அனைத்து வாடிக்கையாளர்களும் KYC அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயம். 2022 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி KYC அப்டேட் செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்கெனவே மொபைல் நம்பருக்கு செய்தி அனுப்பப்பட்டு இருக்கிறது.
டிசம்பர் 12ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்வதற்கு உங்கள் பிஎன்பி வங்கி கிளையை அணுகவும். KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.
அதோடு, வங்கியில் இருந்து யாரும் KYC அப்டேட் செய்ய வாடிக்கையாளர்களை மொபைலில் தொடர்புகொள்ளமாட்டார்கள் என பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்துள்ளது. எனவே, நீங்கள் KYC அப்டேட் செய்ய வங்கி கிளைக்கு மட்டுமே செல்ல வேண்டும். KYC அப்டேட் செய்து தருவதாக யாராவது உங்களுக்கு போன் செய்தால் அவர்கள் மோசடி கும்பலாக இருக்க வாய்ப்பு அதிகம்.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் கட்டாயமாக KYC அப்டேட் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. வங்கிகளும், வங்கி பரிவர்த்தனைகளும் தீவிரவாதம், குற்றச் செயல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்காகவே KYC கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
மேலும் படிக்க
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!
Share your comments