1. செய்திகள்

2ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு – தற்போது குறைந்துள்ள உயிரிழப்பு.

Aruljothe Alagar
Aruljothe Alagar

Corona update

தமிழகத்தை பொறுத்த வரை இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆயிரத்தை தாண்டியது. அதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதாவது தமிழகத்தில் மூன்றரை மாதங்கள் கழித்து 2 ஆயிரத்திற்கும் கீழ் இன்று தான் பதிவாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் அதிகமாக பரவ தொடங்கிய நிலையில் மே மாதத்தில் தீவிரமாக உச்சம் பெற்றது. தற்போது இந்த நிலை மாறி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா பாதித்த 27,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களை பொறுத்தவரை இன்று மட்டும் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 33,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிறப்பு என்னவென்றால் 21 மாவட்டங்களில் கொரோனா காரணமாக எவ்வித  உயிரிழப்பும் பதிவாகவில்லை

இன்றைய கொரோனா பாதிப்பு பொறுத்த வரை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,34,136 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அவற்றில், 1,971 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மொத்த பாதிப்பு 25,37,373 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் தற்போதுதான், இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது ஆச்சரியத்திற்குரியது.

இன்று மட்டும் 2,558 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 24,76,339 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 209 பேரும், சேலத்தில் 136 பேரும், ஈரோட்டில் 122 பேரும், சென்னையில் 147 பேரும் , கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:

ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் அபாயகரமானது!

English Summary: Less than 2 thousand corona damage - currently reduced mortality.

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.