1. செய்திகள்

8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மக்கள் பள்ளி தொடங்கப்படும்

T. Vigneshwaran
T. Vigneshwaran
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்குகிறது

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கவுள்ளது. தன்னார்வலர்கள் நாள் தோறும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பார்கள். 

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் இருப்பது கணடறியப்பட்டு மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்பட்டாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்க தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி கொண்ட மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் மக்கள் பள்ளி திட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில்  பள்ளிக் கல்வித் துறையின் இந்த முன்முயற்சி திட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே கல்வித்துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் என்ற 8 மாவட்டங்களில் இத்திட்டம் முதற் கட்டமாக செயப்படுத்தவுள்ளது. அக்டோபர் 18ம் தேதி தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டம், பிறகு அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

முன்னதாக சமக்ரா ஷிக்ஷா அபியான்-2.0 திட்டத்திற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம், பாலர் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பரிமாணங்களும் உள்ளடக்கப்படும். புதிய கல்வி கொள்கை 2020 ன் கீழ்  இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் உட்பட, சமக்ரா ஷிக்ஷா அபியான்-2.0 இன் கீழ், மழலையர் வகுப்பு, ஸ்மார்ட் வகுப்பறை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான ஏற்பாடுகள் என்று எதிர்வரும் ஆண்டுகளில் படிப்படியாக பள்ளிகளில் செய்யப்படும். இது தவிர, ஒரு உள்கட்டமைப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறைகள் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் பள்ளிகள் 1 முதல் 8 ம் வகுப்பு வரை நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும்

Solar Panel: முதலீடு ரூ. 70.000! வருமானம் லட்சங்களில் 90% அரசு மானியம்!

English Summary: People's school will be started for students up to 8th standard Published on: 01 October 2021, 11:51 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.