1. செய்திகள்

ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

KJ Staff
KJ Staff
Aadhaar card

இந்தியா குடிமக்களின் ஆதாரங்களில் முக்கியமாக கருதப்படும் ஆதார் அட்டை ஆகும். இது ஒரு அடையாள அட்டை தவிர அரசின் சலுகைகளை பெற தேவையில்லை. இதனை ஒரு  அடையாளமாக மட்டுமே பயன்படுத்த வகை செய்யும் ‘ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா’வை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இதன் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது.

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக மட்டுமே பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்யும் என கூறினார். மேலும் இந்த மசோதாவானது  தனிப்பட்ட சாதி, மதம் என பாகுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க பட்டுள்ளது.  ஆதாரில் உள்ள தனி நபர்களின் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாது, தகவல் இறையாண்மையை பாதுகாக்கும் என்றார். 

Union Minister Ravi Shankar Prasad

நம் நாட்டில் சுமார் 123 கோடி பேர் ஆதார் அட்டை பயன்படுத்திகிறார்கள். அதில் தனி மனிதனின் கை ரேகை, விழித்திரை போன்ற  தகவல்கள் ரகசியமாகவும், பாதுகாப்புடனும் வைபதற்கான சிறப்பம்சங்கள் இந்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

மோடி தலைமயிலான அரசு ஆதார் அட்டையை கடுமையாக்கியதன் விளைவாக அரசின் கஜானாவில் உள்ள நிதி சேமிக்கப்பட்டு,  அவை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக  பயன்படுத்த பட்டு வருகிறது.  மேலும் ஆதார் உதவியால் 4.23 கோடி போலி கியாஸ் இணைப்புகள் மற்றும் 2.98 போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் உதவி தொகை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது என்றார். 

‘ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா’ பல்வேறு விவாதங்களுக்கு பின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி இந்த மசோதா மாநிலங்களவைக்கு விவாதத்திற்கு அனுப்பிவைக்க படும் என்றார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Lok Sabha Passes Aadhaar and Other Laws (Amendment) Bill

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.