1. செய்திகள்

பட்ஜெட் 2019-20: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

KJ Staff
KJ Staff
Nirmala Sitharaman

நாடே எதிர் பார்த்த 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திரா காந்திக்கு அடுத்தபடிய  பெண் நிதி அமைச்சர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்காக கடந்த மாதங்களில் பல்வேறு ஆய்வறிக்கை மேற்கொண்டு பட்ஜெட் தயாரித்துள்ளார்.

என்ன என்ன சிறப்புகளை கொண்டது இந்த பட்ஜெட்?

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% ஆக இலக்கு.

2. முறைசாரா தொழிலாளர்களுக்கு உய்வூதியம்.

 3. 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களும், தொழில்நுட்ப வசதி பெறுதல்.

4. 'சவ்ட்ச் பாரத்' திட்டத்தை மேலும் விரிவு படுத்ததில்.

5. இந்தியா கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் திட்டம் கொண்டு வருதல்.

6. கிராமப்புறங்களில் வேளாண் சார்த்த 75,000 அதிகமான தொழிற்சாலைகளை அமைத்தல்.

7. திறன் வாய்த்த தொழிலாளர்களை உருவாக்குதல்.

8. பெண்கள் சுய உதவி குழுக்களை அதிக படுத்துதல்.

Integrated Benefits

9. 2022 ஆம் ஆண்டிற்குள் அனைத்து இல்லங்களுக்கும் சமையல் எரிவாயு மற்றும் மின்வசதி தருவது.

10.புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்துதல்

11. 5 லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கு வருமான வரி விலக்கு

12.வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பாஸ்போர்ட் கொண்டு ஆதார் கார்டு பெறலாம்.

13.பேட்ரி அல்லது எலக்ட்ரானிக் (e-car) வாகனங்களுக்கு வரி குறைக்க படும்.

14.ஆண்டு வருமானம் 2-5 கோடி வரை 3% , 5 கோடிக்கு மேல் 7% வருமான வரியும் விதிக்க படும்.

15.வரி செலுத்துவதற்கு பான் கார்டு போல ஆதார் கார்டும் பயன் படுத்தலாம்.

16.பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ 1 உயர்த்த பட்டுள்ளது.

Tax Benefits

17. மின்சாதன பொருட்களின் மீதான சுங்கவரி நீக்க பட்டுள்ளது.

18. பார்வை குறைபாடு உள்ளவர்களும் பயன் பெறும் வகையில் புதிய 1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுக படுத்த படும்.     

19. 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர்  

20. விரைவில் ரெயில் நிலையங்களை அனைத்தும் நவீனமயக்க படும், அதற்கான  திட்டங்கள் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

21. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம்

22. உலக தரத்திலான கல்வி நிறுவனங்கள் அமைக்க  ரூ.400 கோடி ஒதுக்கீடு

23. விண்வெளி துறையில் புதிய சாதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

24. 2022க்குள் தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். விவசாயத் துறைக்கு மண்டல வாரியாக முன்னுரிமை வழங்கப்படும்.

25. பசுமை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து  33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க பட உள்ளன.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Budget 2019 Highlights: Union Finance Minister Nirmala Sitharaman Presented In The Lok Shaba

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.