நீண்ட நாட்கள் வாழ்வதற்கு காரணமான உணவுப் பொருளை, அமெரிக்க நிறுவனம் (American Company) ஒன்று தனது ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளது.
உணவுப் பொருள் பற்றிய ஆராய்ச்சி:
உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். அதிலும் சூடான காரணமான உணவை சிலர் விரும்பி உண்பார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு, ஊட்டச்சத்துக்கள் (Nutrients) நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், உணவுகள் குறித்த ஆராய்ச்சியும் அதைத் தான் எடுத்துரைக்கிறது. அந்த வகையில், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association) என்ற நிறுவனம் நீண்ட ஆயுளுக்கான உணவுப் பொருள் எது என்பதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியது. இதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. இதன்படி, சிவப்பு மிளகாயை (Red pepper) உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆயுள் நீடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் உயிர் வாழ:
Scientific sessions 2020 என்ற மாநாட்டில் இந்நிறுவனம், தங்களின் முதல் ஆராய்ச்சி அறிக்கையை வழங்கியது. உணவில் மிளகாயை சேர்த்துக் கொண்டால், நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என எடுத்துரைத்துள்ளது. மிளகாய் சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருள். அதிலும் சிவப்பு மிளகாய், மசாலாப் பொருட்களில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxident), அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு தன்மை, இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதால், தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால, மக்கள் நீண்ட ஆயுளைப் பெறலாம். குறிப்பாக இதயநோய் மற்றும் புற்றுநோயால் (Cancer) இறக்கும் நபர்களின் அபாயத்தை குறைப்பதில் மிளகாய் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆய்வு முடிவுகள்:
அமெரிக்கா, இத்தாலி, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் 5,70,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பதிவுகள் (Health records) இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. உணவில் தவறாமல் மிளகாய் சேர்த்துக் கொண்டவர்கள், இருதய உயிரிழப்புகளில் 26% குறைவாகவும், புற்றுநோய் உயிரணுக்களில் 23% குறைவாகவும் மற்றும் இதர உயிரிழப்புகளில் 25% குறைவாகவும் வாய்ப்புள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!
மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
குறைந்தது பருத்தி சாகுபடி! மாற்றுப் பயிர்களில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Share your comments