தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளிவந்துள்ளது.
இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது மிதமான அளவில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 2 என்றும், (சென்னை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 2 என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
Share your comments