தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயம். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்துள்ளனர். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 4451 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 32 குறைந்து ரூ. 35,608 ஆக உள்ளது.
சென்னையில் இன்று 24 காரட் தூய தங்கத்தின் விலை (Gold Rate), ஒரு கிராம் ரூபாய் 4815.00 ஆகவும் ஒரு சவரன் ரூபாய் 38,520.00 ஆகவும் விற்பனையில் உள்ளது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூ. 67,800-க்கு விற்கப்படுகிறது.
தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,340 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,570 ஆகவும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,690 ரூபாயிலும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,390 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,270 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,270 ஆகவும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 63,500 என்ற விலையில் உள்ளது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கக்கூடும்.
உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை வேறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் காணலாம்.
மேலும் படிக்க...
Share your comments