சில நாட்களாகக் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த நிவாரணம் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் விலையில் ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கிறதா என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
கடந்த பல மாதங்களாகக் கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவித நிவாரணம் வெளிவரவில்லை. அந்த நிலையில் தற்பொழுது இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையினை எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த அறிவிப்பு வெளியானதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்தனர். எனவே இந்த மாதம் எல்பிஜி சிலிண்டர் விலையை முன்பதிவு செய்யப் போகிறீர்கள் எனில், அதற்கு முன் உங்கள் நகரத்தில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை என்னவாக இருக்கிறது என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
இந்தியன் ஆயில் இணையதளத்தின்படி, இன்று வீட்டு கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக கேஸ் சிலிண்டர் விலைகளில் எந்தவகை மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில், கடந்த மாதம் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.115.50 குறைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தொடர்ந்து 6 முறையாக 19 கிலோ சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்துஇருக்கின்றது
இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியைப் பற்றிக் குறிப்பிடுகையில் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1053க்கு விற்கப்படுறது. இது தவிர கொல்கத்தாவில் ரூ.1079 எனவும், மும்பையில் ரூ.1052.50 எனவும், சென்னையில் ரூ.1068.50 எனவும் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
வணிக எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ 1744 , மும்பையில் ரூ 1696, சென்னையில் ரூ 1891.50, கொல்கத்தாவில் 1845.50 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments