"உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களான 'மேட் இன் தமிழ்நாடு' பொருள்கள் சென்றடைய வேண்டும்" எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசிய உரையில்"தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்து இருக்கிறது. 14-வது இடத்திலிருந்து தமிழ்நாடு 3-வது இடத்தினைப் பிடித்திருக்கிறது. இது இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு நற்சான்றாக அமைந்திருக்கிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
இந்த ஆட்சியில் இதுவரை 5 மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். சென்னையில் இரண்டு, கோவை, தூத்துக்குடி, துபாய் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. இது 6-வது மாநாடு எனக் கூறிய முதல்வர், ஓராண்டு காலத்திற்குள் 6 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும், இந்த மாநாட்டில் நிதி நுட்பங்களுக்கான செயல் திட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
10 நாட்களுக்கு முன்பாகத்தான் மேம்பட்ட வளர்ச்சி திட்டத்துக்காக ஒரு சிறப்பு மாநாட்டும் நடத்தப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு மாநாட்டிற்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலருக்கு இணையான பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும். உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மேட் இன் தமிழ்நாடு பொருள்கள் அனைத்தும் சென்றடைய வேண்டும் முதலான கருத்துக்களைப் பகிரிந்துகொண்டார்.
இன்றைய மாநாட்டில் நிதி நுட்பத்துறைக்கெனப் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னணுமயமாக்கப்பட்டுள்ள நிதிச் சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
பம்ப்செட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் அச்சம்!
Share your comments