மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவமனை சேவையை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, ஒய்எம்சிஏ மைதானத்தில் நடமாடும் மருத்துவமனை சேவையை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்பு: ICAR Recruitment: பட்டதாரிகள் கவனத்திற்கு, ரூ 44.000 சம்பளம்! விவரம் உள்ளே
அதன்படி, நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர். மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நடமாடும் மருத்துவமனை செல்கின்றன. தமிழகத்தில் உள்ள தொலைதூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க மருத்துவ வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருப்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: Grafting Technique: ஒரே செடியில், உருளை கிழங்கு மற்றும் தக்காளி வளர்க்கலாம்!
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை செய்வதில் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்ற சேவைகள், இந்த வாகன சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இன்று கூடுதலாக இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம், மக்கள் குறிப்பிடதக்க முறையில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
பேருந்து கட்டண உயர்வு குழப்பம்: போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
Share your comments