வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)
வட உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு உள் கர்நாடகம் வழியாக தென் கேரளம் வரை சுமார் 1 கிலோமீட்டர் உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
27.04.21
-
இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
28.04.21
-
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
29.04.21
-
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
பகல் வேளைகளில் அதிக வெப்பம் கொளுத்தும் வாய்ப்பு உள்ளதால், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
ஓய்வுகாலத்தில் ரூ.50லட்சம் கையில் இருக்க வேண்டுமா?- இந்தத் திட்டம் கொடுக்கும்?
தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?
வெறும் 4% விவசாயிகளே வேளாண் பண்ணைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Share your comments