தமிழகத்தில், கருப்பு பூஞ்சை (Black Fungus) நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்
கருப்பு பூஞ்சை நோய் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழு (Special Medical Team), தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதன் பின்னர் அந்த குழுவினர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்து உள்ளது. இதுவரை 2,700 பேர் பாதிக்கப்பட்டனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு. முதலில் மருந்து தட்டுப்பாடு இருந்தது. தற்போது இல்லை. சிகிச்சைக்கு மாற்று மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ துறை தயார்
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இனியும் வர உள்ளது. இதன் அடுத்த அலை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த நோய் பாதிப்பை சமாளிக்க மருத்துவ துறை தயாராக உள்ளது. முதலில், பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மக்கள் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே மக்கள் வருகின்றனர். பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு விகிதம் (Death Rate) குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழக அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது. அரசின் முயற்சியால் நல்ல பலன் கிடைத்து உள்ளது. கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது. உலகவில் இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகம் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்
85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!
Share your comments