1. செய்திகள்

என்ன பங்காளி உங்க ஊர்லயும் மெட்ரோவா? பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Metro project will be implemented in Madurai and Coimbatore district

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கோவை, மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சரின் பட்ஜெட் உரையினை தவிர்த்து மற்றவை அவை குறிப்பில் இடம்பெறாது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.  தமிழக நிதித்துறையின் அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் 3-வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு-

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்தா மருத்துவக்கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகளானது 434 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மரக்காணத்தில் 25 கோடி ரூபாயில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தெரிவித்த நிதியமைச்சர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் 2 வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் மெட்ரோ ரெயில் திட்டம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு. ரூ. 77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழக மக்களிடம் நன்மதிப்பை பெற்ற பேருந்தில் மகளிர் மேற்கொள்ளும் இலவச பயணத்துக்காக ரூ. 2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் குறித்த தகவலை காண இணைத்திருங்கள்.

மேலும் காண்க:

மாற்றுத் திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு உட்பட மற்ற தமிழக பட்ஜெட் விவரங்கள் உள்ளே

போனா வராது.. 9223 காலி பணியிடம்- CRPF கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Metro project will be implemented in Madurai and Coimbatore district says TN budget 2023

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.