மேட்டூர் அணையில் நிரம்பிய தண்ணீரால், அணைக்கு பிரச்சனை வராத வகையில், அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் 1,15,000 கன அடி நீரும் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம், மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, விவசாய பணிகளுக்கென குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதன்படி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கர் நிலமும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலமும் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், இவ்வணையின் மூலம் பாசனம் பெறுகின்றது.
மேலும் படிக்க: தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களுக்குட்பட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளீட்டோர் சற்று மேடான பகுதிக்குச் சென்று பாதுக்காப்பாக இருக்கும் படியும், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் படியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் காவிரி ஆற்றின் வழியாக அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றாங்கரை ஓரங்களில் பரிசல்களை இயக்கவோ குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காவிரிக் கரையோரங்களில் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: New GST Rates: இன்று முதல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்களின் பட்டியல்!
வருவாய்த்துறை, பொதுபணித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது' எனவும், அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
தொழில் அதிபராக மாற விருப்பமா- Myrada வேளாண் நிலையத்தில் 2 நாள் பயிற்சி!
Share your comments