1. செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Poonguzhali R
Poonguzhali R
Mettur Dam Opened : Farmers happy

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இன்று மாலை நீர் திறப்பு மேலும் 10,000 கனசதுரமாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார். வரும் நாட்களில் டெல்டா பகுதிகளில் தேவைக்கு ஏற்ப திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருடன் இணைந்து காலை 11.13 மணியளவில் அணையின் மதகுகளை முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்.

அணையிலிருந்து திறக்கப்படும் நீரினால் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் விளைவாக, டெல்டா பகுதி விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட்டு, சம்பா பருவத்திற்குத் தயாராகலாம் எனக் கூறப்படுகிறது.

மே மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். வழக்கமாக ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதாவது, நீர்வரத்து அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அணையின் நீர்மட்டம் விரைவில் அதன் அதிகபட்ச கொள்ளளவை (120 அடி) தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின், அணையின் வரலாற்றில், மே மாதத்தில், தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நல்ல வரத்துக் கிடைத்ததை அடுத்து இன்று அணை திறக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் தூர்வாரும் பணி விரைவில் முடிக்கப்பட்டு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிற பகுதிகளுக்கு வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

English Summary: Mettur Dam Opened : Farmers happy Published on: 24 May 2022, 02:51 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.