1. செய்திகள்

ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்
'Micro' ATM for farmers in ration shop

பயிர் கடன் பெறும் விவசாயிகளின் நலன் கருதி, முதல் கட்டமாக, தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி.எம், கருவிகள் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

சென்னை தவிர்த்த, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் கடன் தொகையை எடுக்க, கூட்டுறவு சங்கங்களுக்கும், வங்கி ஏ.டி.எம்., மையங்களுக்கும் அதிக துாரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் பயன் பெறும் வகையில், முதல் கட்டமாக 500 தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி. எம்., எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மைக்ரோ ஏ.டி.எம்., என்பது கையடக்க வடிவில், 'கார்டு ஸ்வைப்’ செய்யும் வசதியுடன் கருவி இருக்கும். அந்த கருவியில், விவசாயிகள் கார்டை ‘ஸ்வைப்' செய்து, தேவைப்படும் பணத்தை பதிவு செய்யலாம்.

உடனே அதற்கு ஏற்ப, கூட்டுறவு சங்க ஊழியர்கள் ரொக்க பணத்தை எண்ணி வழங்குவர். இதனால், பயிர் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே பயிர் கடன் தொகையை பணமாக பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இச் செய்தி தினமலர் செய்தி தாளில் வெளியிடப்பட்ட தகவல் என்பது குறிப்பிடதக்கது.

 மேலும் படிக்க: தமிழகத்தின் கம்பம் திராட்சைக்கு GI டேக்: இதன் பயன் என்ன?

இதற்கு முன்னர், ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர், எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் சில மாநிலங்களில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டன. அதாவது, பணம் எடுக்கும் ஏ.டி.எம். போல, ரேஷன் வழங்குவதற்காக தானிய ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் 7 இயந்திரங்கள் இதுவரை செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதில் 3 இயந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டன. மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் கடந்த மாதம் 15-ந்தேதி தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு தானியம் வழங்கப்படுகிறது. ஏ.டி.எம். மையத்தில் இருக்கும் விரல் பதிவு இயந்திரத்தில் ரேஷன்கார்டுதாரரின் விரல் அடையாளம் வைக்கப்பட்டவுடன், அந்த இயந்திரத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமை வெளிவரும்.

30 வினாடிகளில் இந்த நடைமுறை அனைத்தும் முடிவடைவதால், ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருப்பு என்ற நிலை மாறியிருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இது அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க:

இனி பொய் சொல்லி 'சிக் லீவ்' எடுக்க முடியாது!

Book My Show ஆட்சேர்ப்பு 2023 – உதவி மேலாளராக பணிப்புரிய உடனே விண்ணப்பிக்கவும்

English Summary: 'Micro' ATM for farmers in ration shop Published on: 12 April 2023, 12:54 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.