1.இந்திய ரயில்வே: இரயில் பயணிகளுக்கு தினை அடிப்படையிலான உணவை வழங்க உள்ளது.
IRCTC ஆனது தினை லட்டு, ரொட்டி மற்றும் பஜ்ரா, ஜோவர், ராகி, தினை கச்சோரி, தினை கிச்சடி, தினை தாலியா, தினை பிஸ்கட், ராகி இட்லி, ராகி தோசை மற்றும் ராகி உத்தபம் போன்ற உணவுப் பொருட்களை ரயில்களில் வழங்கும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் மெனுவில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க விரும்புகிறது, அவற்றில் சில தினை கொண்டு செய்யப்படும். IRCTC இன் உயர்மட்ட மண்டல மேலாளர் அஜித் குமார் சின்ஹா கருத்துப்படி, உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும், ரயில் நடைமேடைகளில் உள்ள 78 நிலையான அலகுகள் உட்பட, தினை அடிப்படையிலான உணவுகளைச் சேர்க்க தங்கள் மெனுக்களை விரிவுபடுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
2,புதிதாக 100 பூங்காக்கள் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஆண்டில் புதிதாக 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு...
கடந்த 2 ஆண்டுகளில் 307 பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்..
3,தங்கத்தின் தரத்தை அறிய ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் புதிய முறை அமல்
தங்கத்தின் தரத்தை அறிய ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில், HUID எனப்படும் 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண்கள் உள்ள நகைகளை மட்டும் விற்க அனுமதி..
அடையாள எண் இல்லாமல் விற்றால் நகையின் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை என இந்திய தர நிர்ணய அமைவனம் எச்சரிக்கை..
4,வானைத்தொட்டது தங்கம் விலை
நேற்று கிராம் ரூ.5,565-க்கும், பவுன் ரூ.44,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளியும் விலை உயர்ந்து கிராம் ரூ.76.20 ஆகவும், கிலோ ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5,வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அனுமதி மறுப்பு..அமைச்சர் விளக்கம்...!
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடலூர் வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமையவிருந்த பகுதி காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தின்கீழ் வருவதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்புகள் காரணமாக ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
6,பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து 314-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
7,102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
முதன்முறையாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரியும், கரூர், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி அளவில் வெயில் நிலவியது. கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் 97 டிகிரி வெயில் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் படிக்க
புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!
STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கல் !
Share your comments