நடைப்பெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கடந்த 13.03.2023 முதல் 03.04.2023 வரை தமிழகத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு (மார்ச் / ஏப்ரல் -2023) பொதுத்தேர்வு நடைப்பெற்றது. அவற்றின் முடிவுகளை நேற்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இத்தேர்வில் மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பெற்றது.
திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற வணிகவியல் பிரிவு மாணவி ச.நந்தினி 600-க்கு 600 என மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என தான் தேர்வெழுதிய அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று இச்சாதனையினை நிகழ்த்தியுள்ளார். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், படிப்பு மட்டுமே எனது சொத்து என்று நினைத்த படித்து காரணத்தால் தான் இந்த அளவிற்கு தன்னால் மதிப்பெண் எடுக்க முடிந்தது என தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் CA படிக்க விரும்புவாதகவும் தனது ஆசையினை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றைய தினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர், உயர்கல்வி பயில்வதற்கு மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், இ.ஆ.ப., ஆகியோரும் உடனிருந்தனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு நடைப்பெற உள்ளது. சுமார் 47,934 (5.97%) பேர் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: MK stalin(twitter)
மேலும் காண்க:
TN 12th Result- லட்சம் பேரில் இவுங்க ரெண்டு பேர் தான் ஹைலைட்.. ஏன்?
Share your comments