தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் நேரத்தில், உடனே புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதிகரிக்கும் மின் நுகர்வு
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மின் நுகர்வு பதிவாகி வருகிறது. பல வீடுகளில் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்ற பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. மின் நுகர்வு மற்ற மாவட்டங்களை விடவும் சென்னையில் அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் தேவை எவ்வளவு வந்தாலும், அதனை பூர்த்தி செய்கின்ற அளவு தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாகவும், அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்தடைக்கு புகார் அளிக்க
சென்னையில் நேற்று முன்தினம், மின் நுகர்வு அதிகபட்சமாக 3991 மெகாவாட் என உச்சத்தை எட்டி உள்ளது. மேலும் சென்னையில் மின் தேவை எவ்வித தங்கு தடையின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20.4.2023 அன்று 3778 MW என இருந்தது. மேலும் சென்னையில் மட்டும் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் என நேற்று முன்தினம் (மே 15) பயன்படுத்தப்பட்டது.
இது மட்டுமில்லாமல் வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணுக்கு உடனே அழைத்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
மாட்டுச்சாணத்தில் தயாராகும் கோயில் சிலைகள்: இயற்கை விவசாயி அசத்தல்!
திருட்டுப் போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments