ராகுல் டீ-சர்ட் பற்றி பா.ஜனதா விமர்சனம் செய்ததற்கு காங்கிரசார் மற்றும் ராகுல் ஆதரவாளர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து உள்ளனர். அதில், 'இதுபோன்று பா.ஜ.க. விமர்சிப்பதன் மூலம் ராகுலின் நடைபயணத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது' என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் வெளியிட்ட பதிவில், 'ராகுல் காந்தி மக்கள் பணத்தில் இருந்து தனக்கான ஆடைகளை வாங்கிக் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்திக்கு கட்டுக்கடங்காத மக்கள் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதை பார்த்து பா.ஜனதா தலைவர்களுக்கு பயம் வந்துள்ளது. எனவேதான் ராகுல் காந்தியின் ஆடை பற்றி பேசுகிறார்கள்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம் என்று எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றித் தானே பேச வேண்டும்.
அதை விட்டுவிட்டு ராகுல் ஆடை பற்றி தேவையில்லாமல் சர்ச்சை செய்தால் நாங்களும் மோடியின் ஆடை பற்றி பேச வேண்டியது இருக்கும். பிரதமர் மோடி 10 லட்சம் ரூபாய் செலவில் கோட்-சூட் அணிந்தார். அதைப்பற்றி பேசலாமா? தற்போது கூட அவர் அணியும் மூக்கு கண்ணாடி விலை 1.50 லட்சம் ரூபாய். இதை பற்றி நாங்கள் விரிவாக பேச வேண்டியது வரும். இவ்வாறு காங்கிரஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments